ஜெர்மனியில் மூன்றாண்டு குடியுரிமை திட்டம் ரத்து – புதிய அரசாங்கத்தின் புதிய போக்கு

ஜெர்மனியில் மூன்றாண்டு குடியுரிமை திட்டம் ரத்து – புதிய அரசாங்கத்தின் புதிய போக்கு

ஜெர்மனியின் புதிய கூட்டணி அரசு, நன்கு ஒருங்கிணைந்த புலம்பெயர்ந்தவர்களுக்கு (well-integrated immigrants) வழங்கப்பட்ட 3 ஆண்டு குடியுரிமை திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.

மூன்றாண்டு குடியுரிமை திட்டம் – ஒரு பார்வை

2023 ஜூன் மாதத்தில் அறிமுகமான இந்த விரைவான குடியுரிமை திட்டம், ஜெர்மனியில் மூன்று ஆண்டுகள் வசித்தவர்களுக்கு – அவர்கள் C1 நிலை ஜெர்மன் மொழித் திறனுடன், சமூகத்தில் தன்னார்வ பணிகள், வேலை வாய்ப்பு அல்லது கல்வியில் நன்கு செயல்பட்டிருந்தால் – குடியுரிமை பெற அனுமதித்தது. இது புலம்பெயர்ந்தோர் சமூகத்தில் பெரிதும் வரவேற்கப்பட்டது.

அரசியல் விமர்சனங்களும் திட்ட முடிவும்

இந்த திட்டம் “டர்போ குடியுரிமை” என்ற பெயரில் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CSU) ஆகிய கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் என்பது குடியுரிமைக்குத் தேவையான நிரம்பிய காலமல்ல என்றும், ஒருங்கிணைப்பு அளவை சரியாக மதிப்பீடு செய்ய முடியாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து, புதிய கூட்டணியின் கீழ், மூன்றாண்டு குடியுரிமை திட்டம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

தொடரும் ஐந்தாண்டு திட்டம் – எதிர்கால போக்கு

இந்நிலையில், கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட மற்ற சீர்திருத்தங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின் கீழ்:

  • B1 நிலை ஜெர்மன் மொழித் திறனைக் கொண்டவர்கள்
  • தொடர்ந்து 5 ஆண்டுகள் ஜெர்மனியில் வசித்தவர்கள்

இவர்கள் குடியுரிமைக்குத் தகுதியானவர்களாக கருதப்படுவர்.

இதுவரை நிலவிய 8 ஆண்டு தேவையுடன் ஒப்பிடும்போது, இது ஒரு முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.

For more details, please contact my team. Thank you.

Phone number

+ 91 6301550340

+ 91 6380692148

Leave a Comment